TNPSC Thervupettagam

மாநில மேம்பாட்டுக் கடன் விகிதங்கள் – பஞ்சாப்

July 26 , 2023 360 days 206 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, கருவூலப் பத்திரங்கள் மற்றும் மாநில மேம்பாட்டுக் கடன்களின் அடுத்த ஏலத்தை அறிவித்துள்ளது.
  • மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் 364 நாள் நிறைவு காலத்திலான கருவூலப் பத்திரங்களுக்கான வரி வரவுகள் முறையே 6.71 சதவீதம், 6.83 சதவீதம், மற்றும் 6.86 சதவீதம் ஆகும்.
  • இம்முறை பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன.
  • 2034 ஆம் ஆண்டு ஜூலை 05 ஆம் தேதியன்று நிறைவடையும் மாநில மேம்பாட்டுக் கடன்களுக்குப் பஞ்சாப் 7.41 சதவீதமாக அதிகபட்ச வட்டி விகிதங்களை வழங்குகிறது.
  • அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியன தலா 7.40 சதவீதம் விகிதங்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்