TNPSC Thervupettagam

மாநிலங்களிடையேயான குழு - சந்திப்பு

November 26 , 2017 2583 days 5680 0
  • மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலினுடைய (inter-state Council) நிலைக் குழுவின் (Standing Commitee) 12-வது சந்திப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
  • மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட புன்சி கமிஷனின் பரிந்துரைகளை விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது.
  • முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான மதன் மோகன் புன்சியின் தலைமையில் மத்திய அரசால் இந்த கமிஷன் 2005-ல் அமைக்கப்பட்டது.
  • இது தன்னுடைய அறிக்கையை 2010-ல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
  • நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் நடந்த மாற்றங்களின் மீது கண் கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான புதிய பிரச்சனைகளை ஆராய்வதற்காக இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.
மாநிலங்களிடையேயான கவுன்சில் (Inter-State Council)
  • மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு அரசியலமைப்பு விதி 263-ன் கீழ் அமைக்கப் பெறும் ஓர் அரசியல் நிறுவன அமைப்பே (Constitutional Body) மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஆகும்.
  • கொள்கைகள், திட்ட செயல்பாடுகள், மாநிலங்களின் பொது நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய – மாநில அரசினிடையேயான சிறந்த ஒருங்கிணைப்பிற்கு இக்கவுன்சில் பரிந்துரை வழங்கவல்லது.
  • இருப்பினும், மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு இது நிரந்தர அரசியல் நிறுவன அமைப்பு (Permanent Constitutional body) அல்ல.
  • நாட்டின் பொது நலன்கள் இத்தகு குழு அமைப்பதன் மூலம் சேவையின் வழி நிறைவுபடுத்தப்படும் என குடியரசுத் தலைவருக்கு தோன்றும் போது  இக்கவுன்சில் அமைக்கப்படும்.
  • இக்கவுன்சிலின் உள்ளடக்கம்
    • இக்கவுன்சிலின் தலைவர் – பிரதமர்
    • உறுப்பினர்களாக அனைத்து இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள்
    • சட்டசபை உடைய யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள்,
    • சட்டசபை இல்லா யூனியன் பிரதேசங்களின் மத்திய நிர்வாகிகள்
    • மேலும் உறுப்பினர்களாக பிரதமரால் நியமிக்கப்பட்ட கேபினேட் அமைச்சருக்கான தகுதியுடைய ஆறு மத்திய அமைச்சர்கள்.
  • மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலினுடைய நிலைக்குழு (standing Committee) மத்திய உள்துறை அமைச்சரை தலைவராகவும்., கேபினேட் அமைச்சர் தகுதியுடைய 5 அமைச்சர்கள் மற்றும் 9 மாநிலங்களின் முதல்வர்களை உறுப்பினர்களாகவும் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்