பொருளாதாரச் சந்தையிருந்து ரூ.15,721 கோடி அளவில் கூடுதல் நிதியினை கடனாகப் பெறுவதற்கு 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மாநிலங்கள் 2021-22 ஆம் நிதியாண்டின் ஜுன் வரையிலான காலாண்டுப் பகுதிக்காக நிதி அமைச்சகம் நிர்ணயித்த மூலதனச் செலவின இலக்குகளைப் பூர்த்தி செய்துள்ளன.
அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.25 சதவீதத்திற்குச் சமமான கூடுதல் பொதுச் சந்தைக் கடன் அனுமதியானது அவற்றிற்கு வழங்கப்பட்டது.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மீதான 4 சதவீதத்தின் மொத்த நிகரக் கடன் வரம்பில் 0.50 சதவீதமானது 2022 ஆம் நிதியாண்டின் போது மாநிலங்களுக்கு ஆகும் அதிகப் படியான மூலதனச் செலவினங்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்டது.
அந்த மாநிலங்களாவன: ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகியனவாகும்.