இந்தியாவானது ஐக்கிய நாடுகள் சபையினால் வலியுறுத்தப்பட்ட 16 நிலையான மேம்பாட்டு இலக்குகளுள் (SDGs) ஒன்பது இலக்குகளில் பின்தங்கியுள்ளது.
36 இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் (UTs) இந்த 15 SDG இலக்குகளில் நான்கில் மட்டுமே, இலக்கின் பூர்த்தி நிலையில் குறைந்தது பாதியளவை அடைந்து உள்ளன.
உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மிகக் குறைவான பின்தங்கிய குறிகாட்டிகளைக் கொண்டிருந்தாலும், அவை ஒவ்வொன்றிலும் ஆறு குறிகாட்டிகளில் ஒன்றில் சவால்கள் நீடிக்கின்றன.
உத்தரப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பதினாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள், அவற்றின் 30-43 சதவீத SDG குறிகாட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதிக்கும் குறைவாகவே எட்டியுள்ளன.
இந்த ஒரு அறிக்கையானது 2025 ஆம் ஆண்டிற்கான அனில் அகர்வால் பேச்சுவார்த்தை என்பதின் போது வெளியிடப் பட்டது.