TNPSC Thervupettagam

மாநிலங்களின் நிலை குறித்த அறிக்கை

December 11 , 2020 1503 days 688 0
  • மூன்றாவது முறையாக, அஇஅதிமுக அரசின் கீழ் தமிழ்நாடு மாநிலமானது “சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலமாக” (ஒட்டு மொத்தம்) உருவெடுத்துள்ளது.
  • இது “இந்தியா டுடே – எம்டிஆர்ஏ மாநிலங்களின் நிலை குறித்த ஆய்வு 2020” என்ற ஆய்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இது தில்லியில் உள்ள ஒரு முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான ‘சந்தைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற  ஒரு நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
  • இதில் இமாச்சலப் பிரதேசம் 2வது இடத்தையும் பஞ்சாப் 3வது இடத்தையும் பிடித்து உள்ளன.
  • கோவிட் – 19 மேலாண்மைப் பிரிவில், பெரிய மாநிலங்களில் அசாம் மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • சிறிய மாநிலங்களில், கோவா மாநிலமானது தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்படும் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் செயல்பாடு

  • மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • இது இந்தியாவில் 6வது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்.
  • இது நாட்டில் மூன்றாவது அதிக தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு உள்ளது.
  • இது நாட்டில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம் ஆகும்.
  • தமிழ்நாடு மாநிலத்தில் ஊட்டச் சத்துக் குறைபாடானது நாட்டில் மிகக் குறைந்ததாக உள்ளது.
  • தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, தமிழ்நாடு மாநிலமானது தேசிய சராசரியை விட அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் அகில இந்திய சராசரியான 4.2% என்ற சதவிகிதத்தை விட இரட்டிப்பாக 8.03% என்ற அளவில் தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.
  • அதே ஆண்டில் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டின் தலா தனிநபர் வருமானமானது ரூ.1,53,853 ஆகும்.
  • இது தமிழ்நாட்டின் நிலையான முந்தைய ஆண்டில் 12வது இடத்திலிருந்து 6வது இடத்திற்குச் செல்ல வழிவகை செய்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில் தமிழ்நாடானது ரூ.1,42,941 என்ற தலா தனிநபர் வருமானம் என்ற அளவுடன் 12வது இடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்