மூலதனச் செலவினங்களை மிக நன்கு அதிகரிக்கவும், நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும், மாநில அரசுகளுக்கு 1.73 லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 89,086 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது, மத்திய அரசினால் வசூலிக்கப்படும் மொத்த வரிகளில் 41% ஆனது ஒரு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு பல தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மிக அதிகபட்சமாக 31,039.84 கோடி ரூபாய் ஒதுக்கீட்டைப் பெற்றது, அதைத் தொடர்ந்து பீகார் 17,403.36 கோடி ரூபாய் மற்றும் மேற்கு வங்காளம் 13,017.06 கோடி ரூபாய் ஒதுக்கீட்டைப் பெற்றது.