PREVIOUS
இந்தியாவின் மாநிலங்களுக்கிடையேயான பரிமாற்ற முறை (inter-state transmission system - ISTS) ஏலத்தின் ஒரு பகுதியான 126 மெகா வாட் அளவுடைய காற்றுத் திட்டம் முதலாவதாக குஜராத்தின் புஜ் பகுதியில் இயக்கப்பட்டது.
இத்திட்டமானது 2017ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் நிறுவனம் (Solar Energy Corporation of India Ltd -SECI) நடத்திய முதல் ISTS ஏலத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டமானது ஓஸ்ட்ரா கட்ச் விண்ட் பிரைவேட் லிமிட்டெட் ஆல் நடத்தப்படுகிறது.
ISTS மூலம் ஒரு மாநிலத்தில் உருவாக்கப்படும் மின்சாரமானது மின் பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு அனுப்பப்படும்.
பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவற்றால் குஜராத்தில் இத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரம் வாங்கப்படுகிறது.