TNPSC Thervupettagam

மாநிலங்கள் உருவாக்க தினம் 2024 - நவம்பர் 01

November 3 , 2024 69 days 135 0
  • நவம்பர் 01 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய எட்டு இந்திய மாநிலங்கள் தனது உருவாக்க தினத்தினைக் கொண்டாடின.
  • தமிழ்நாடு மாநிலமானது, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மெட்ராஸ் (மதராஸ்) மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
  • இது பின்னர் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு என மறு பெயரிடப் பட்டது.
  • ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று தனி ஆந்திரப் பிரதேச மாநிலமானது உருவாக்கப்பட்டது.
  • சத்தீஸ்கர் மாநிலம் ஆனது 2000 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று உருவாக்கப் பட்டது.
  • ஹரியானா மாநிலம் ஆனது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று கிழக்கு பஞ்சாப் மாநிலத்திலிருந்து மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு ஒரு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • கர்நாடகாவானது, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மைசூர் மாநிலமாக உருவாக்கப் பட்டது.
  • பின்னர் 1973 ஆம் ஆண்டில் கர்நாடகா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று கேரளா உருவாக்கப்பட்டது.
  • மாநிலங்களின் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் (1966) கீழ், பஞ்சாப் மாநிலமானது உருவானதைக் குறிக்கும் வகையில் நவம்பர் 01 ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் பஞ்சாப் தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்