TNPSC Thervupettagam

மாநிலங்கள் உருவாக்க தினம் - ஜனவரி 21

January 25 , 2025 3 days 25 0
  • இந்திய வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் ஜனவரி 21 ஆம் தேதியன்று தங்கள் மாநில தினத்தினைக் கொண்டாடின.
  • 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் அவை முழு மாநில அந்தஸ்தைப் பெற்றன.
  • "இந்தியாவின் இரத்தினம்" என்று நன்கு அழைக்கப்படும் மணிப்பூர், 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
  • "மேகங்களின் உறைவிடம்" என்று அழைக்கப்படுகின்ற மேகாலயா, 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் தேதியன்று அசாம் மாநிலத்திற்குள்ளேயே ஒரு தன்னாட்சி மாநிலமாக உருவானது.
  • 1949 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று, இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை திரிபுரா ஒரு சுதேச மாநிலமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்