TNPSC Thervupettagam

மாநிலச் சட்டங்களின் வருடாந்திர மதிப்பாய்வு 2023

May 11 , 2024 200 days 246 0
  • 2023 ஆம் ஆண்டில், 10 மாநிலங்கள் சமர்ப்பித்த 18.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதிநிலை அறிக்கைகளில், 40% ஆனது விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டில் 20 மாநிலங்களில் 84 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.
  • உத்தரப் பிரதேசம் (20), அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் (11), மகாராஷ்டிரா (9) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப் பட்டன.
  • 2022 ஆம் ஆண்டில் 15 மற்றும் 2021 ஆம் ஆண்டில் 144 உடன் ஒப்பிடும்போது, 2023 ஆம், கேரளாவில் நான்கு அவசரச் சட்டங்கள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டன.
  • மத்தியப் பிரதேசம் ஆனது அதன் 3.14 லட்சம் கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் 85% வரை எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, இது பத்து மாநிலங்களின் மத்தியில் அதிகபட்சம் ஆகும்.
  • கேரளா 78% உடன் இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (75%) மற்றும் மேற்கு வங்காளம் (74%) ஆகியவை உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில், பொதுக் கணக்குக் குழு 24 அமர்வுகளை நடத்தி,  சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சராசரியாக 16 அறிக்கைகளை தாக்கல் செய்தது.
  • பீகார், டெல்லி, கோவா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 13 மாநிலங்களுள் தகவல் கிடைக்கப்பெற்ற ஐந்து மாநிலங்களில் பொதுக் கணக்குக் குழுவானது எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
  • இதற்கு மாறாக தமிழ்நாட்டின் பொது கணக்குக் குழுவானது 95 அறிக்கைகளைத் தாக்கல் செய்த வேளையில் அதனித் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் (75) உள்ளது.
  • மாநிலச் சட்டமன்றங்கள் மசோதாக்களை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட நேரத்தின் பகுப்பாய்வு ஆனது, பல மசோதாக்கள் குறைந்தபட்ச விவாதத்துடன் மிக விரைவாக நிறைவேற்றப்பட்டதைக் காட்டுகிறது.
  • உண்மையில், 44% மசோதாக்கள் அவை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ நிறைவேற்றப்பட்டன.
  • இந்த எண்ணிக்கையானது 2022 (56%) மற்றும் 2021 (44%) ஆகிய ஆண்டுகளில் காணப் பட்ட போக்குடன் ஒத்துப் போகிறது.
  • குஜராத், ஜார்க்கண்ட், மிசோரம், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அனைத்து மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலோ அல்லது மறுநாளோ நிறைவேற்றப்பட்டன.
  • 28 மாநிலச் சட்டமன்றங்களுள் 13 சட்டமன்றங்களில், அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து நாட்களுக்குள் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • கேரளா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மசோதாக்களை நிறைவேற்ற ஐந்து நாட்களுக்கு மேல் எடுத்தன.
  • ராஜஸ்தானில் சுமார் 55% மசோதாக்கள் ஐந்து நாட்களுக்கும் மேலான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்