TNPSC Thervupettagam

மாநிலச் சட்டமன்ற அமர்வுகள் பற்றிய ஆராய்ச்சிப் பகுப்பாய்வு

June 8 , 2023 408 days 284 0
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு மாநிலச் சட்டசபைகள் சராசரியாக 21 நாட்கள் மட்டுமே கூடியுள்ளன.
  • இந்தியாவில் ஏழு மாநிலச் சட்டசபைகள் மட்டுமே 2022 ஆம் ஆண்டில் 30 நாட்களுக்கு  மேல் கூடியுள்ளன.
  • கர்நாடகாவில் அதிகபட்சமாக 45 நாட்கள் கூடியுள்ள நிலையில், இதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (42) மற்றும் கேரளா (41) ஆகியவை உள்ளன.
  • வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் மட்டுமே தேசியச் சராசரியான 21 நாட்களைத் தாண்டி மாநிலச் சட்டமன்றச் சபை அமர்வுகளைக் கூட்டியுள்ளது.
  • மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் தலா 15 நாட்கள் மாநிலச் சட்ட மன்றச் சபை அமர்வுகளைக் கூட்டியுள்ளது.
  • நாகாலாந்து சட்டப் பேரவை (NLA) வெறும் ஆறு நாட்கள் மட்டுமே கூடியுள்ளது.
  • நாகாலாந்து தவிர, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலச் சட்டசபைகள் நாட்டிலேயே இரண்டாவது குறைந்த எண்ணிக்கையிலான (7) கூட்டங்களை நடத்தி உள்ளன.
  • சிக்கிம் 10 நாட்கள் அளவிலான கூட்டங்களை நடத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2022  ஆம் ஆண்டில் சராசரியாக 20 மாநிலங்கள், எட்டு நாட்களுக்கு மட்டுமே பட்ஜெட் பற்றி விவாதம் நடத்தப் பட்டுள்ளது.
  • தமிழகத்தில்  பட்ஜெட் விவாதம் 26 நாட்கள் நடைபெற்றது.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகா (15), கேரளா (14), ஒடிசா (14) ஆகியவை உள்ளன.
  • டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தலா இரண்டு நாட்கள் மட்டுமே பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தியுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் 28 மாநிலங்களில் சராசரியாக 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாகாலாந்து மட்டுமே மிகக் குறைவாக மூன்று மசோதாக்களை மட்டுமே நிறைவேற்றி உள்ளது.  
  • அந்தந்த மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 56% மசோதாக்கள் அதே நாளிலேயே நிறைவேற்றப் பட்டு உள்ளன.
  • சுமார் 5% அளவிலான மசோதாக்கள் மட்டுமே ஒரு விரிவான ஆய்வுக்காக பேரவைக் குழுவுக்கு அனுப்பப் பட்டு  உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்