TNPSC Thervupettagam

மாநிலச் சின்னம் அறிமுகம் - ஆந்திரப் பிரதேசம்

November 22 , 2018 2068 days 651 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று தனது அலுவலகப் பயன்பாட்டிற்காக புதிய மாநிலச் சின்னத்தை அறிமுகப்படுத்தியது. 2014 ஆம் ஆண்டில் மாநில பிரிப்பிற்குப் பின் 5 வருடம் கழித்து ஆந்திரப் பிரதேச அரசு மாநில சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மாநில சின்னமானது அமராவதி கலைப் பள்ளியால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • இறகு வடிவ இலைகள் மற்றும் விலை மதிப்பற்ற கல் ஆகியவை மாறி மாறி அமைந்த மூன்று இரத்தினங்களின் வளையத்தினால் அலங்கரிக்கப்பட்ட வட்டத்தின் சக்கரமான “தர்ம சக்காவை” இச்சின்னம் கொண்டுள்ளது.
  • மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று வட்டங்கள் எண்களின் ஏறு வரிசையில் இதில் அமைந்துள்ளன. இதன் உள்வட்டத்தில் 48 மணிகளும் நடுவில் 118 மணிகளும் வெளிவட்டத்தில் 148 மணிகளும் உள்ளன.
  • இது தம்ம சக்காவின் மையத்தில் “புனா கட்கா” அல்லது “தி வேஸ் ஆப் பிளெண்டி” என்ற முத்திரையை கொண்டுள்ளது. இந்த முத்திரையானது குஞ்சங்களுடனும் பதக்கங்களுடனும் அதன் முக்கியப் பகுதியின் மீது 4 பட்டை கொண்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இவற்றின் லேசான கழுத்துப் பகுதி மற்றும் வாய்ப் பகுதியைச் சுற்றி இழை உள்ளது.
  • மாநிலச் சின்னத்தின் அடிப்பகுதியில் தேசியச் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. தேசிய சின்னத்தின் உயரமானது 24 மில்லி மீட்டருக்கு குறைவில்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்