TNPSC Thervupettagam

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் பதவிக்காலம் – தமிழ்நாடு

February 19 , 2024 280 days 1054 0
  • 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
  • மாநிலத் தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை "ஐந்து/ஆறு ஆண்டுகள் அல்லது அறுபத்தைந்து வயதாகவும் (இவற்றுள் எது முந்தையதோ), அதனை நீட்டிப்பதற்கான எந்த வழிவகையும் இல்லாத" வகையில் நிர்ணயிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பெரும்பாலான மாநிலங்களில், மாநில தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் ஆனது ஐந்து ஆண்டுகள் அல்லது அவர்கள் தங்களது அறுபத்தைந்து வயதை எட்டும் வரை இவற்றுள் எது முந்தையதோ அதன்படி பின்பற்றப் படுகிறது.
  • 1994 ஆம் ஆண்டு சட்டத்தின் 239வது உட்பிரிவின் 2வது துணைப்பிரிவின் தற்போதைய (b) சட்டப்பிரிவின் படி, மாநிலத் தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் ஆனது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதோடு அவர் இரண்டு தொடர்ச்சியான பதவிக் காலங்களில் பணியாற்றத் தகுதியுடையவரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்