TNPSC Thervupettagam

மாநிலப் பேரிடர் மீட்பு நிதி

March 21 , 2020 1866 days 872 0
  • மாநிலப் பேரிடர் மீட்பு நிதியின் (SDRF– State Disaster Response Fund) மூலம் நிதியுதவியை அளிக்கும் நோக்கத்திற்காக கோவிட் – 19 நோயைஅறிவிக்கப்பட்ட பேரிடராகஅறிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இந்த நிதியானது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் அந்தந்த மாநிலங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதுஅறிவிக்கப்பட்ட பேரிடர்களைகையாளுவதற்காக மாநில அரசுகளிடம் இருக்கும் ஒரு முதன்மையான நிதி ஆதாரமாகும்.
  • இந்தநிதியானது 13வதுநிதிக்குழுவின்பரிந்துரையின்அடிப்படையில்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், மாநிலஅரசுகள்/ஒன்றியப் பிரதேசங்கள் மாநில அரசிடம் இருந்து பெறப்படும் நிதியைத் தவிர, கூடுதலாக மாநிலப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் நிதியைப் பெற முடியும்.
  • இச்சட்டத்தின்படி, மாநிலப் பேரிடர் மீட்பு நிதியானது 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்அறிவிக்கப்பட்ட பேரிடர்களுக்குமட்டுமே பயன்படுத்த முடியும்.
  • பொதுப்பிரிவு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களுக்கான SDRF நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு 75 சதவிகித நிதியையும் வடகிழக்கு மாநிலங்கள்சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கான SDRF நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு 90 சதவிகித நிதியையும் அளிக்கும்.
  • SDRF ஆனதுஒதுக்கப்பட்ட நிதியின்” கீழ் பொதுக் கணக்கில் உள்ளது.
  • ஆனால் நேரடிச் செலவினங்களை பொதுக் கணக்கு நிதியிலிருந்து மேற்கொள்ளக்கூடாது.
  • SDRF-ற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி  “உதவியாகக் கொடுக்கும் நிதியாககருதப்படும்.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது SDRF-ன் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் தலைமை அமைச்சகமாகும். மேலும் இது குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்கும்.
  • இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) ஒவ்வொரு ஆண்டும் SDRFஐ தணிக்கை செய்கின்றார்.
  • சூறாவளிகள், வறட்சி, சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிப்பாறைச் சரிவுகள், பூச்சித் தாக்குதல்கள் போன்றவை SDRFன் கீழ் உள்ளடங்கும்.
  • பேரிடர் சார்ந்த 31 பிரிவுகள் முக்கியமான 5 துணைக் குழுக்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவையாவன: நீர் மற்றும் காலநிலை தொடர்பான பேரிடர்கள், புவியியல் சார்ந்த பேரிடர்கள், இரசாயன, தொழிற்துறை மற்றும் அணு ஆயுதம் தொடர்பான பேரிடர்கள், உயிரியல் சார்ந்த பேரிடர்கள் (உயிரியல் பேரிடர்கள் மற்றும் தொற்று நோய்கள்) ஆகியவையாகும்.

தற்போதையநிலை

  • கரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்காக நிதியை ஒதுக்கிய இந்தியாவின் முதலாவது மாநிலம் ஒடிசா ஆகும்.
  • ஒடிசா மாநிலமானது இந்தக் கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதற்காக ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது.
  • இந்தக் கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.60 கோடியை ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்