June 13 , 2020
1629 days
741
- நிதி ஆணையத்திற்கான குறிப்புரை விதிகள் மாநிலங்களுக்கு மானிய நிதியுதவி வழங்குவதற்கு வேண்டி அதற்கு பரிந்துரை செய்துள்ளன.
- இந்த நிதியுதவி பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.
- வருவாய்ப் பற்றாக்குறை மானியம்
- உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியுதவி
- பேரிடர் மேலாண்மை நிதியுதவி
- 2020-21 ஆம் ஆண்டிற்காக வேண்டி, இந்த ஆணையமானது வரிகளின் பகிரப்படக் கூடிய தொகுதியில் 41% நிதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்துள்ளது.
- மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை நிர்ணயிப்பதற்காக நிதி ஆணையம் பின்வரும் தகுதிநிலைகளைப் பின்பற்றுகின்றது. அவையாவன:
- வருவாய்ப் பற்றாக்குறைக்கு 45%
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு 15%
- நிலப்பகுதிக்கு 15%
- காடுகள் மற்றும் சூழலியலுக்கு 10%
- மக்கள்தொகைச் செயல்பாடுகளுக்கு 12.5%
- வரி வசூல் முயற்சிகளுக்கு 2.5%
Post Views:
741