மான்ஸ்டர் ஊதியக் குறியீட்டு அறிக்கையானது ஆராய்ச்சிப் பங்காளராக அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடனும் paycheck.in என்ற இணைய தளத்துடனும் இணைந்து மான்ஸ்டர் இந்தியா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையானது “இந்திய நிறுவனங்களில் பெண்கள்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
கண்டறியப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள்
இந்தியாவில் தன்னுடன் இணைந்து பணியாற்றும் ஆண்களை விடப் பெண்கள் 19 சதவிகிதம் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இந்தியாவில் பணியாற்றும் 60 சதவிகிதம் பெண்கள் பணியாற்றும் இடத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக எண்ணுகின்றனர்
துறை வாரியாக, தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பத்தினால் வழங்கப்படும் சேவைகளில் ஆண்களுக்கு ஆதரவாக 26 சதவிகித ஊதிய இடைவெளி காணப்படுகிறது. இதற்கு அடுத்து உற்பத்தித் துறையில் பெண்களை விட ஆண்கள் 24 சதவிகிதம் அதிகமாக ஊதியம் பெறுகின்றனர்.
சுகாதாரத் துறை, நலப்பணிகள் மற்றும் சமூகப் பணிகளில் பெண்களை விட ஆண்கள் 21 சதவிகிதம் அதிகம் ஊதியம் பெறுகின்றனர். வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் மட்டும் ஆண்கள் பெண்களை விட 2 சதவிகிதம் மட்டுமே அதிக ஊதியம் பெறுகின்றனர்.