முன்னும் பின்னுமாக வரும் கடல் அலைகளுடன் ஒப்பிடுகையில், கப்பல்கள், கடலோர மற்றும் கடல் சார் உள்கட்டமைப்பு மற்றும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மாபெரும் அலைகள் வழக்கத்திற்கு மாறாக பெரிய அலைகளாகும்.
இதுவரையில் இந்த அலைகளைக் கணிக்க என்று எந்த செயல் முறையும் கண்டறியப் படவில்லை.
172 கடல் மிதவைகளின் வலையமைப்பினால் சேகரிக்கப்பட்ட பில்லியன் கணக்கான தரவுப் புள்ளிகளைப் பயன்படுத்தி, மாபெரும் அலைகளுக்கு முன்னதாக ஏற்படும் அலை வடிவங்களை வேறுபடுத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அவற்றின் உருவாக்கத்தினை அறிய ஒரு செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
உலக கடல்சார் அமைப்பின் கடல் சூழல் நிலைக் குறியீடு ஆனது 0 (அலைகள் இல்லாத நிலை) முதல் 9 (14 மீட்டருக்கு மேல் எழும்பும் அலைகள்) அளவில் அலை உயரத்தின் அடிப்படையில் கடலில் நிலவும் சூழல் நிலையை வகைப்படுத்துகிறது.