செசெல்ஸ் நாடு நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு ஒரு ஜோடி மாபெரும் அல்டபெராவின் ஆமைகளை பரிசாக வழங்குகிறது.
செசெல்ஸ் அதிபர் டேனி பயூரின் (Danny Faure) இந்தியாவிற்கான ஐந்து நாள் சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவிற்கு பரிசாகக் கொடுப்பதற்காக இந்த ஆமைகள் கொண்டு வரப்பட்டன.
புதுதில்லியில் உள்ள மத்திய விலங்கியல் பூங்கா ஆணையம் (CZA - Central Zoo Authority) இந்த ஆமைகளை பராமரிக்க அனுமதி அளித்த பின்னர் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவிடம் இவை ஒப்படைக்கப்பட்டன.
மாபெரும் அல்ட்பெராவின் ஆமையானது (Aidabrachelys Gigantea) செசெல்ஸ் அல்டபெரா பவளத் தீவில் மட்டும் வாழும்.
இது கிரகத்தில் வாழும் பெரிய இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக நீண்ட நாட்கள் உயிர் வாழும் விலங்கினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. (200 வருடங்களுக்கு மேல் உயிர் வாழும்)
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியல்படி, இந்த வகை ஆமைகள் ‘மறையத்தகு உயிரினங்கள்’ (vulerable) எனும் வகைப்பாட்டில் உள்ளன.
அல்டபெரா ஆமைகளை பரிசாக அல்லது கடனாக நட்பு நாடுகளுக்கு வழங்குவது செசெல்ஸ் அரசத் தந்திரமாகும்.
இதற்கு முன்பு செசெல்ஸ் 2010ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் பூங்காவிற்கு கடனாக இரண்டு ஆமைகளை அளித்தது. அதன் பின்னர் 2014-ல் ஒரு ஜோடி ஆமைகளை சீனாவில் உள்ள கியாங்ஷோ பூங்காவிற்கு அளித்தது.