TNPSC Thervupettagam

மாபெரும் அளவிலான கருந்துளை

April 8 , 2023 470 days 235 0
  • அண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளைகளில் ஒன்றை வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  • இந்த மாபெரும் கருந்துளையின் நிறை 30 பில்லியன் சூரியன்களுக்கு இணையாகும்.
  • இது நமது சூரிய குடும்பத்தில் உள்ளதைப் போன்ற பில்லியன் கணக்கான சூரியன்களை உட்கிரகிக்கக் கூடிய அளவிலானது.
  • இந்தக் கருந்துளையானது, ஏபெல் 1201 என்ற அண்டத் திரளில் உள்ள அண்டங்களில் ஒன்றினுள் அமைந்துள்ளது.
  • இது பூமியிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது முதல் முறையாக ஈர்ப்பியல் வளைவுரு முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஈர்ப்பியல் வளைவுரு என்பது ஒரு முன்னிருக்கும் அண்டமானது, மிகவும் தொலை தூரப் பொருளிலிருந்து வரும் ஒளியை வளைத்து அதைப் பெரிதாக்கிக் காட்டுதல் என்பதாகும்.
  • ஒரு நட்சத்திரமானது அதன் வாழ்நாளின் முடிவில் தகர்ந்து, ஒரு கருந்துளையினை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்