TNPSC Thervupettagam

மாபெரும் பனி யுக நிலப்பரப்புகள் – வடக்கு கடல்

February 11 , 2025 11 days 74 0
  • சுமார் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு பெரியப் பனிப்படலத்தில் புதைந்த நிலப்பரப்புகள் ஆனது வட கடலுக்கு அடியில் மிகவும் ஆழமானப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இன்றைய நார்வே பகுதியிலிருந்து பிரிட்டிஷ் தீவுகள் வரை பரவியிருந்த இந்தப் பனிப் படலம் ஆனது, உருகுவதற்கு முன்னதாக குறிப்பிடத்தக்க அடையாளங்களை விட்டுச் சென்றது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது பல ஆண்டு காலப் பனிப்பாறை இயக்கவியல் மற்றும் மாறிவரும் பருவநிலை வடிவங்களுடனான அவற்றின் தொடர்பை அறிவியலாளர்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன.
  • இந்த மாபெரும் பனிப்படலமானது சுமார் 1.3 மில்லியன் முதல் 700,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மத்தியப் ப்ளீஸ்டோசீன் மாற்றம் (MPT) எனப்படும் கடைசிப் பனி யுகத்தின் போது உருவானது.
  • பனி யுகம் ஆனது தோராயமாக 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11,700 ஆண்டுகளுக்கு முன்பான காலக் கட்டத்தில் நிறைவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்