மத்திய அரசானது, யானைக்கால் நோய் - நிணநீர் ஃபைலேரியாசிஸ் (LF) பாதிப்பினை ஒழிப்பதற்கான வருடாந்திர அளவிலான நாடு தழுவிய மாபெரும் மருந்து வழங்கீட்டு (MDA) பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த பிரச்சாரமானது, 13 மாநிலங்களில் உள்ள சுமார் 111 மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் யானைக்கால் நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்குகிறது.
MDA பிரச்சாரம் என்பது பாதிப்புக் காரணி மூலம் பரவும் நோய்களின் தேசியக் கட்டுப்பாட்டு மையத்தினால் (NCVBDC) மேற்கொள்ளப்படும் இந்தியாவின் யானைக் கால் நோய் ஒழிப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாகும்.
நிணநீர் ஃபைலேரியாசிஸ் (ஹாட்டிபான்) என்பது பொதுவாக யானைக்கால் நோய் என அழைக்கப்படுகிறது.
இது ஃபிலாரியோடிடியா குடும்பத்தின் நூற்புழுக்கள் (உருளைப்புழுக்கள்) என வகைப் படுத்தப் பட்ட ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
இது 20 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 345 மாவட்டங்களில் பதிவான ஒரு முன்னுரிமை கவனிப்பு அளிக்கப்படும் நோயாகும் என்பதோடு மொத்த நோய்ப் பாதிப்புகளில் 90 சதவீதப் பாதிப்புகள் ஆனது எட்டு மாநிலங்களில் பதிவாகி உள்ளது.