TNPSC Thervupettagam

மாமல்லபுரம் கற்சிற்பங்கள் புவிசார் குறியீட்டை பெற்றது

November 28 , 2017 2582 days 1170 0
  • தமிழ்நாட்டின் மாமல்லபுரத்து கைவினை கற்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு புவிசார் குறியீட்டு பதிப்பகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
  • அழகு நேர்த்தியுடைய இந்த கற்சிற்ப செதுக்கு தொழிற்நுட்பமானது கி.பி.ஏழாம் நூற்றாண்டில் உருவானது.
  • மாமல்லன் (பெரும் மற்போராளன்) என்று அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவனின் பெயர் கொண்டு இந்த இடத்திற்கு மாமல்லபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • பல்லவ வம்சமானது கி.பி.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்தது. மாமல்லபுரம் என்ற துறைமுக நகரத்தை கலை மற்றும் கட்டிடக் கலையின் மையமாக உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள்.
  • கற்சிற்ப கலைக்கு பல்லவ மன்னர்கள் பெரும் பங்களிப்பு ஆற்றியவர்களாவர்.
  • அவர்களாவர்,
    • மகேந்திரவர்மன் (கி.பி.580- கி.பி 680)
    • முதலாம் நரசிம்மவர்மன் அல்லது மாமல்லன் (கி.பி.630- கி.பி 668)
    • பரமேசுவர வர்மன் (கி.பி.672- கி. பி700)
    • இரண்டாம் நரசிம்ம வர்மன் அல்லது ராஜசிம்மன் (கி.பி.700- கி.பி 728)
  • இச்சிற்ப கலையில், பெரும் அடர்த்தியும், பெரும் விலைமதிப்பும் உடைய கிரானைட் கற்களுக்குப் பதிலாக நீல உலோகங்கள் (Blue Metal) பயன்படுத்தப்பட்டுள்ளன.
புவிசார் குறியீடு - தமிழ்நாடு
  • அதிக எண்ணிக்கையிலான பொருட்களுக்கு புவிசார் குறியீடு உடைய மாநிலங்களின் கணக்கில், தமிழ்நாடு முதலிடத்திலும், உத்திரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • டார்ஜிலிங் டீ ஆனது புவிசார் குறியீடு பெற்ற முதல் இந்திய உற்பத்திப் பொருளாகும்.
  • புவிசார் குறியீடு பெற தமிழகம் இதுவரை 50 பொருட்களை புவிசார் குறியீடு பதிப்பகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அவற்றில் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  • இவற்றுள் காஞ்சிப்பட்டு மிகவும் புகழ்பெற்றது.
  • இதுவரை திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்