“மாய தீவு உருவாக்கி” ("Magic Island Maker") என சீனாவால் அழைக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய கடல் தூர்வாரும் கப்பலை தயாரித்து சீனா வெளிக்காட்டியுள்ளது .
தையான் குன் ஹவோ என பெயரிடப்பட்டுள்ள சீனாவின் இப்பெரிய கப்பலானது தென் சீனக் கடல் பகுதிகளில் இராணுவ நிலையங்கள் அமைப்பதற்காக மணல், மண் முகடு, பவளப் பாறை போன்றவற்றை தூர்வாரி பவளப்பாறை கூட்டமைவுகளையும், சிறு தீவு முகடுகளையும் செயற்கைத் தீவுகளாக மாற்றப் பயன்படும்.
இக்கப்பலானது, கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.