பாதுகாப்பு அமைச்சகம் ஆனது மாயா OS எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இணையவெளித் தாக்குதல்களிலிருந்து தனது கணினி அமைப்புகளின் பாதுகாப்பு திறனை நன்கு வலுப்படுத்தச் செய்வதற்காக வேண்டி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் உருவாக்கப் பட்ட ஒரு புதுமையான இயங்கு தளமாகும்.
இது இலவசமாகக் கிடைக்கப் பெறச் செய்கின்ற மென்பொருளைப் பயன்படுத்துகின்ற, திறந்தவெளி இயங்குதள மூலமான உபுண்டு இயங்குதளத்தினைச் சார்ந்துள்ளது.
மிகவும் குறிப்பிடத் தக்க வகையில், Windows OS இயங்கு தளத்தின் இடைமுகம் மற்றும் செயல்பாடுகளைப் போன்று செயல்படுவதை ஒரு நோக்கமாகக் கொண்டு மாயா OS உருவாக்கப்பட்டுள்ளது.
மாயா OS ஆனது சக்ரவியூகம் என்ற கடைநிலை தீநிரல் எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருளைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து அமைச்சகக் கணினிகளிலும் மாயா OS செயல் படுத்தப் படும்.
உபுண்டு இயங்கு தளமானது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயங்கு தளங்களில் ஒன்றாகும்.
மேலும் இது அதன் அதிக அளவிலானப் பாதுகாப்பு அம்சத்திற்காக பிரபலமாக அறியப் படுகிறது.
Windows இயங்கு தளமானது அதிகமானச் சேவைகளை வழங்கச் செய்வதாலும் அதன் பின்னோக்கிய இணக்கத் தன்மையாலும் அதிக எண்ணிக்கையிலான தீநிரல் மற்றும் பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
ஆனால் உபுண்டு இயங்கு தளத்தில் தீநிரல்களும் பாதிப்புகளும் மிகக் குறைவு ஆகும்.