TNPSC Thervupettagam
August 13 , 2023 471 days 373 0
  • பாதுகாப்பு அமைச்சகம் ஆனது மாயா OS எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இணையவெளித் தாக்குதல்களிலிருந்து தனது கணினி அமைப்புகளின் பாதுகாப்பு திறனை நன்கு வலுப்படுத்தச் செய்வதற்காக வேண்டி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் உருவாக்கப் பட்ட ஒரு புதுமையான இயங்கு தளமாகும்.
  • இது இலவசமாகக் கிடைக்கப் பெறச் செய்கின்ற மென்பொருளைப் பயன்படுத்துகின்ற, திறந்தவெளி இயங்குதள மூலமான உபுண்டு இயங்குதளத்தினைச் சார்ந்துள்ளது.
  • மிகவும் குறிப்பிடத் தக்க வகையில், Windows OS இயங்கு தளத்தின் இடைமுகம் மற்றும் செயல்பாடுகளைப் போன்று செயல்படுவதை ஒரு நோக்கமாகக் கொண்டு மாயா OS உருவாக்கப்பட்டுள்ளது.
  • மாயா OS ஆனது சக்ரவியூகம் என்ற கடைநிலை தீநிரல் எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருளைக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து அமைச்சகக் கணினிகளிலும் மாயா OS செயல் படுத்தப் படும்.
  • உபுண்டு இயங்கு தளமானது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயங்கு தளங்களில் ஒன்றாகும்.
  • மேலும் இது அதன் அதிக அளவிலானப் பாதுகாப்பு அம்சத்திற்காக பிரபலமாக அறியப் படுகிறது.
  • Windows இயங்கு தளமானது அதிகமானச் சேவைகளை வழங்கச் செய்வதாலும் அதன் பின்னோக்கிய இணக்கத் தன்மையாலும் அதிக எண்ணிக்கையிலான தீநிரல் மற்றும் பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
  • ஆனால் உபுண்டு இயங்கு தளத்தில் தீநிரல்களும் பாதிப்புகளும் மிகக் குறைவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்