TNPSC Thervupettagam
March 1 , 2023 508 days 312 0
  • கணினித் துறை சார்ந்த அறிவியலாளர் ஹரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான மார்கோனி பரிசு வழங்கப் பட்டுள்ளது.
  • "கம்பிவடம் சார்ந்த மற்றும் சாராத வலையமைப்புகள், தொலை உணர்வு மற்றும் விநியோக அமைப்புகள் ஆகியவற்றில் அவர் ஆற்றிய அடிப்படைப் பங்களிப்புகளுக்காக" அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
  • மார்கோனி பரிசு என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள மார்கோனி என்ற அறக்கட்டளையால் வழங்கப் படுகிற, கணினித்துறை சார்ந்த அறிவியலாளர்களுக்கு வழங்கப் படும் ஒரு சிறந்த அங்கீகாரம் ஆகும்.
  • "மேம்பட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணிம உள்ளடக்கத்தை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியவர்களுக்கு" இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • டாக்டர் பாலகிருஷ்ணன் இதற்கு முன்பு இன்ஃபோசிஸ் பரிசு (2020) மற்றும் IEEE கோஜி கோபயாஷி கணினி மற்றும் தகவல் தொடர்பு விருது (2021) ஆகியவற்றைப் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்