TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - அக்டோபர் 01 முதல் 31 வரை

October 18 , 2024 15 days 107 0
  • உலகளவில் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்று நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது ஒரு  நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த மாத அளவிலான அனுசரிப்பானது பொதுமக்களுக்கு இது குறித்து கல்வியினை வழங்குவதற்கும், அதனை முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிப்பதற்கும், மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கான நிதி திரட்டலை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது.
  • மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து கட்டியை உருவாக்கும் போது மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
  • 100,000 பெண்களில் சுமார் 25.8 பேர் பாதிக்கப்படுகின்றனர் (வயதிற்கேற்ப சமன் செய்யப் பட்ட விகிதம்) மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சுமார் 100,000 பெண்களுக்கு 12.7 ஆக உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் புதிய பாதிப்புகளுடன் (அனைத்து புற்றுநோய்களில் 11.7%) இது உலகளாவியப் புற்றுநோய் பாதிப்புகளுக்கான முன்னணி காரணமாக இது உள்ளது.
  • 1965 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் மார்பகப் புற்று நோயின் பாதிப்பு சுமார் 50% அதிகரித்துள்ளது.
  • மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 13 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “No-one should face breast cancer alone” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்