மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - அக்டோபர் 01 முதல் 31 வரை
October 18 , 2024 36 days 124 0
உலகளவில் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்று நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த மாத அளவிலான அனுசரிப்பானது பொதுமக்களுக்கு இது குறித்து கல்வியினை வழங்குவதற்கும், அதனை முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிப்பதற்கும், மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கான நிதி திரட்டலை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது.
மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து கட்டியை உருவாக்கும் போது மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
100,000 பெண்களில் சுமார் 25.8 பேர் பாதிக்கப்படுகின்றனர் (வயதிற்கேற்ப சமன் செய்யப் பட்ட விகிதம்) மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சுமார் 100,000 பெண்களுக்கு 12.7 ஆக உள்ளது.
2020 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் புதிய பாதிப்புகளுடன் (அனைத்து புற்றுநோய்களில் 11.7%) இது உலகளாவியப் புற்றுநோய் பாதிப்புகளுக்கான முன்னணி காரணமாக இது உள்ளது.
1965 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் மார்பகப் புற்று நோயின் பாதிப்பு சுமார் 50% அதிகரித்துள்ளது.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 13 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “No-one should face breast cancer alone” என்பதாகும்.