மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் – அக்டோபர் 01/31
October 8 , 2023 416 days 213 0
இந்த வருடாந்திர சர்வதேச சுகாதாரப் பிரச்சாரமானது, இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும், அதற்கான காரணம், தடுப்பு, நோயறிதல், சிகிச்சை மற்றும் நலமடைதல் குறித்த ஆராய்ச்சிக்கு நிதி திரட்டுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இளஞ்சிவப்பு நிற நாடா, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்விற்கான சர்வதேச சின்னமாகும்.
இது 1985 ஆம் ஆண்டில் அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் மற்றும் மேன்மைமிக்க வேதியிய தொழில்துறை மருந்தியல் அமைப்பு ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
மார்பகப் புற்றுநோய் என்பது மார்பகத்தின் சுரப்பி திசுக்களில் உள்ள குழாய்கள் அல்லது முடிச்சுகளின் புறத்திசுக்களில் (அக உறை செல்கள்) உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும்.