TNPSC Thervupettagam

மார்பர்க் வைரஸ் நோய்

July 18 , 2022 735 days 706 0
  • சமீபத்தில், இரண்டு மார்பர்க் வைரஸ் நோய் பாதிப்புகள் கானாவில் பதிவாகியுள்ளன.
  • மார்பர்க் வைரஸ் நோய் என்பது ஒரு தொற்றக்கூடிய இரத்தக்கசிவு சார்ந்த காய்ச்சல் ஆகும்.
  • இது எபோலா வைரஸின் குழுமத்தினை ஒத்த வைரஸ் குடும்பத்தினைச் சேர்ந்தது.
  • பழந்திண்ணி வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் மக்களுக்கு பரவுகிறது.
  • இது மக்களிடம் இருந்து மக்களுக்குப் பரவுவதும் உண்டு.
  • பாதிக்கப்பட்ட நபர் அல்லது மேற்பரப்புகளில் காணப்படும் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுகிறது.
  • இது 2 முதல் 21 நாட்கள் வரையிலான நோய் வளர்ச்சிக் காலத்தினைக் கொண்டது.
  • இந்த நோய் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய மற்றும் ஆபத்தான நோயாகும்.
  • இதற்கு முன்னதாக ஏற்பட்ட தொற்றுகளில் பதிவான இறப்பு விகிதம் ஆனது 24% முதல் 88% வரை இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்