SOV அல்லது சாவரின் (sovereign) எனும் டிஜிட்டல் பணத்தை உருவாக்க மார்ஷல் நாட்டு நாடாளுமன்றம் ஓர் சட்டத்தை இயற்றியுள்ளதன் மூலம் பசுபிக் தீவுப் பிராந்திய நாடான (Pacific Island Nation) மார்ஷல் தீவு (Marshall Island) சங்கேத இணையப் பணத்தை (Crypto Currency) அல்லது டிஜிட்டல் பணத்தை தன்னுடைய அதிகாரப் பூர்வமான பணமாக [Legal tender] அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடாக உருவாகியுள்ளது.
பின்டெக் ஸ்டார்ட்-அப் நீமா (fintech startup Neema) எனும் இஸ்ரேலிய நிறுவனத்துடன் இணைந்து மார்ஷல் தீவு SOV – ஐ வெளியிட்டுள்ளது.
ஆரம்ப நாணய விடுப்புகளில் (Initial Currency Offering-ICO) சுமார் 24 மில்லியன் SOV-க்களை மார்ஷல் குடியரசு வெளியிட உள்ளது
பரிவர்த்தனை மற்றும் கட்டண செலுத்துகையில் அமெரிக்காவின் டாலர்களுக்கு இணையான அந்தஸ்தை மார்ஷல் தீவின் இப்புதிய டிஜிட்டல் பணம் கொண்டுள்ளது. தற்போது அமெரிக்க டாலர்களே மார்ஷல் தீவின் சட்டப் பூர்வ பணமாக இருந்து வருகின்றது.
இதற்குமுன் ‘Petro’ என்ற பெயரில் தனக்கென ஓர் சங்கேத இணையப் பணத்தை வெளியிட்ட உலகின் முதல் நாடாக வெனிசூலா உருவானது. இருப்பினும் இதனுடைய சட்டப்பூர்வ செல்லுபடித்தன்மை இதுவரை அறியப்பட வில்லை.
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஓர் தீவு நாடே மார்ஷல் குடியரசாகும்.
மைக்ரோனேசியா (Micronesia) தீவுக் குழுவில் மிகப் பெரிய தீவுகளில் ஒன்று மார்ஷல் தீவாகும்.
மார்ஷல் குடியரசினுடைய கவாஜெலெய்ன் (Kwajalein) எனும் தீவில் அமெரிக்கா ஓர் இராணுவ தளத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.