77வது உலக சுகாதார சபையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, PMNCH-தாய், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான கூட்டாண்மை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இளம் பருவத்தினரின் நல்வாழ்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட திட்டங்களில் முதலீட்டைக் கணிசமாக அதிகரிக்க அனைத்துப் பங்குதாரர்களும் தவறினால், அதிர்ச்சிகரமான பொருளாதாரச் செலவினம் ஏற்படும் என இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இது 2024 முதல் 2050 ஆம் ஆண்டு வரையில் 110 டிரில்லியன் டாலர் (நன்மைகள்) உலகளாவிய இழப்புகளுக்கு வழிவகுத்தது.
இது ஆண்டிற்கு 4.1 டிரில்லியன் டாலர் அல்லது இதில் உள்ளடக்கப்பட்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7 சதவிகிதம் ஆகும்.
இந்த அறிக்கையானது உலக மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்தினை உள்ளடக்கியது.
இளம் பருவத்தினருக்கான சுகாதாரச் சேவைகளுக்கான திட்டங்கள் ஆனது, முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 9.6 வருமானத்தை அளிக்கும் என்று மதிப்பிடப் பட்டு ள்ளது.
இளம் பருவத்தினருக்கான கல்வி மற்றும் பயிற்சியில் முதலீடு செய்யும் போது முதலீடு செய்யப் படும் ஒவ்வொரு டாலருக்கும் 28.6 டாலர் வருமானம் கிடைக்கும்.