TNPSC Thervupettagam

மாறி வரும் உலகில் இளம் பருவத்தினர்

August 3 , 2024 112 days 198 0
  • 77வது உலக சுகாதார சபையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, PMNCH-தாய், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான கூட்டாண்மை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இளம் பருவத்தினரின் நல்வாழ்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட திட்டங்களில் முதலீட்டைக் கணிசமாக அதிகரிக்க அனைத்துப் பங்குதாரர்களும் தவறினால், அதிர்ச்சிகரமான பொருளாதாரச் செலவினம் ஏற்படும் என இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
  • இது 2024 முதல் 2050 ஆம் ஆண்டு வரையில் 110 டிரில்லியன் டாலர் (நன்மைகள்) உலகளாவிய இழப்புகளுக்கு வழிவகுத்தது.
  • இது ஆண்டிற்கு 4.1 டிரில்லியன் டாலர் அல்லது இதில் உள்ளடக்கப்பட்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7 சதவிகிதம் ஆகும்.
  • இந்த அறிக்கையானது உலக மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்தினை உள்ளடக்கியது.
  • இளம் பருவத்தினருக்கான சுகாதாரச் சேவைகளுக்கான திட்டங்கள் ஆனது, முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 9.6 வருமானத்தை அளிக்கும் என்று மதிப்பிடப் பட்டு ள்ளது.
  • இளம் பருவத்தினருக்கான கல்வி மற்றும் பயிற்சியில் முதலீடு செய்யும் போது முதலீடு செய்யப் படும் ஒவ்வொரு டாலருக்கும் 28.6 டாலர் வருமானம் கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்