TNPSC Thervupettagam

மாறுபக்கக் கொழுப்புகள்

May 10 , 2019 1899 days 612 0
  • தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மாறுபக்கக் கொழுப்புகளை ஒழிப்பதற்காக உலக சுகாதார நிறுவனமானது சர்வதேச உணவு மற்றும் பானக் கூட்டிணைவுடன் (IFBA - International Food and Beverage Alliance) இணைந்துள்ளது.
  • பதப்படுத்தப்பட்ட உணவின் சுவை, அமைப்பு மற்றும் கால அளவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக செயற்கையான மாறுபக்கக் கொழுப்புகளைப் உணவுத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
  • இந்த உணவு வகைகளில் மாறுபக்கக் கொழுப்பானது, “பகுதி ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
  • ஹைட்ரஜனேஷன் ஆனது திரவ எண்ணெய்களை திடமாக்கும். அது அவற்றைக் கொண்டிருக்கும் உணவின் ஆயுட் காலம் மற்றும் சுவையை அதிகரிக்கும்.
  • மேலும் இது குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் https://www.tnpscthervupettagam.com/awareness-of-trans-fatty-acids-tfa/ தேதி:02.19.
தீய விளைவுகள்
  • மாறுபக்கக் கொழுப்புகளானது குறைந்த அடர்த்தி கொண்ட தீய லிப்போ புரதங்கள் (LDL - Low density lipoproteins) கொழுப்பு மற்றும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போ நல்ல புரதங்கள் (HDL  - High density lipoproteins) ஆகியவற்றைக் குறைக்கின்றது.
  • அதிகபட்ச LDL கொழுப்பானது இருதய நோயை ஏற்படுத்துகின்றது.
  • இதயத் தமனி நோயினால் உலக அளவில் 5,00,000 இறப்புகளுக்கு மாறுபக்கக் கொழுப்பு காரணமாக அமைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்