TNPSC Thervupettagam

மாறுபட்ட மண்டலம்

October 24 , 2022 637 days 292 0
  • அறிவியலாளர்கள் சமீபத்தில், மாலத்தீவில் ஒரு ‘மாறுபட்ட மண்டலத்தினை’ கண்டுபிடித்தனர்.
  • இந்த மாறுபட்ட மண்டலம் என்பது கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வகையில் இது ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
  • இது 'பெருங்கடலின் சோலை' என்று குறிப்பிடப்படுகிறது.
  • ஒமேகா சீமாஸ்டர் II என பெயரிடப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் இந்த சுற்றுச்சூழல் அமைப்பைக் கண்டறிந்தனர்.
  • மைக்ரோ-நெக்டன் போன்றவற்றை உண்ணும் சுறாக்கள் மற்றும் பிற பெரிய கடல் மீன்கள் போன்ற பல பெரிய அளவிலான வேட்டையாடி உண்ணும் விலங்குகள் அங்கு இருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
  • மாலத்தீவைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்ட சுறா இனங்கள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்