TNPSC Thervupettagam

மாறும் நிலை கொண்ட நிலத்தடி நீர் ஆதார மதிப்பீட்டு அறிக்கை 2023

December 9 , 2023 223 days 177 0
  • இந்த அறிக்கையை நாடு முழுவதற்குமாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
  • இதற்கு முன்பு 1980, 1995, 2004, 2009, 2011, 2013, 2017, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில்   இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
  • நிலத்தடி நீர் ஆதாரங்களின் தற்போதைய நிலைகளையும், நிலத்தடி நீர் மேலாண்மை நடைமுறைகளின் தாக்கத்தினையும் தீர்மானிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையின்படி, நாடு முழுவதற்கும் தேவையான மொத்த ஆண்டு நிலத்தடி நீரின் மீள்நிரப்பானது 449.08 பில்லியன் கன மீட்டர் (BCM) ஆகும்.
  • மேலும் நாட்டின் ஒட்டு மொத்த தேவைக்காக ஆண்டுக்கு 241.34 BCM நிலத்தடி நீரானது பிரித்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.
  • இது முந்தைய ஆண்டினை விட (2022) 11.48 BCM அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது.
  • மேலும், நாட்டிலுள்ள மொத்த மதிப்பீட்டு அலகுகளான 6553 என்ற அலகில், 4793 என்ற அளவிலான அலகுகளானது ‘பாதுகாப்பானதுஎன்றும் 736 அலகுகள் ‘அதிக அளவில் சுரண்டப்பட்டவை என்றும் இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்