TNPSC Thervupettagam

"மாறும் பருவநிலையில் புலம்பெயர்ந்த குழந்தைகள்" பற்றிய அறிக்கை

October 29 , 2023 264 days 181 0
  • யுனிசெஃப் அமைப்பானது, ‘மாறும் பருவநிலையில் புலம்பெயர்ந்த குழந்தைகள்’ என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • மோசமான வானிலை காரணமாக உலகம் முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளில் தினமும் கிட்டத்தட்ட 20,000 குழந்தைகள் புலம்பெயர்ந்துள்ளனர்.
  • மொத்தமாக 3.1 மில்லியன் குழந்தைகளின் உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் கடந்த ஆறு வருட காலப்பகுதியில் ஏற்பட்ட வானிலை தொடர்பான பேரழிவுகளுடன் தொடர்பு உடையது.
  • சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் தீவிர வானிலை காரணமாக அதிக எண்ணிக்கையிலான குழந்தை புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ள நாடுகளாகும்.
  • மேலும், டொமினிகா மற்றும் வனுவாட்டு போன்ற சிறிய மற்றும் தனித்தமைந்த தீவு நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சோமாலியா மற்றும் தெற்கு சூடானில் உள்ள குழந்தைகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • புலம்பெயர்ந்த 4.3 கோடி குழந்தைகளில் 4 கோடி அல்லது தோராயமாக 95 சதவீதம் பேர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இது தவிர, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வறட்சியால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
  • காட்டுத் தீ காரணமாக 8.1 லட்சம் குழந்தைகள் புலம்பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்