TNPSC Thervupettagam

மாற்றியமைக்கப்பட்ட PKC-ERCP இணைப்பு திட்டம்

February 7 , 2024 163 days 217 0
  • ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசுகளானது மாற்றியமைக்கப்பட்ட பர்பதி-காளிசிந்த்-சம்பால்-ERCP (மாற்றியமைக்கப்பட்ட PKC-ERCP) இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • நீண்டகாலமாக நிலுவையில் உள்ள PKC நதி இணைப்புத் திட்டத்தினைக் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்துடன் ஒருங்கிணைப்பதனை இந்தத் திட்டம் நன்கு வலியுறுத்துகிறது.
  • மாற்றியமைக்கப்பட்ட PKC-ERCP என்பது மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைக்கும் திட்டமாகும்.
  • கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் (ERCP) ஆனது சம்பல் நதிப் படுகையில் உள்ள உள்படுகை நீரை இடம் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது காளிசிந்த், பர்பாதி, மேஜ் மற்றும் சக்கன் துணைப் படுகைகளில் கிடைக்கப் பெறும் பருவமழையின் உபரி நீரைப் பயன்படுத்தி, பனாஸ், கம்பீரி, பென்கங்கா மற்றும் பர்பாதி ஆகிய நீர்ப் பற்றாக்குறை மிக்க துணைப் படுகைகளுக்குத் திருப்பி விடும்.
  • இது கிழக்கு ராஜஸ்தானின் 13 மாவட்டங்களுக்குக் குடிநீர் மற்றும் தொழில்துறை சார் பயன்பாட்டிற்கான நீரை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்