மாற்றியமைக்கப்பட்ட குறைகடத்திகள் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் குறைகடத்திகள் உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனை அலகுகளை அமைப்பதற்கான புதிய விண்ணப்பங்களை வரவேற்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், இந்தியாவில் குறைகடத்திகளின் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கான திட்டச் செலவில் 50% நிதியானது ஊக்கத் தொகையாக நிறுவனங்கள் /கூட்டமைப்பு / துணிகர முதலீட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கப் பெறும்.
இதே போல், இந்தியாவில் குறிப்பிட்டத் தொழில்நுட்பங்களின் விற்பனை அலகுகளை அமைப்பதற்கான திட்டச் செலவில் 50% நிதியானது ஊக்கத்தொகையாக கிடைக்கப் பெறும்.
இந்தியா குறைகடத்திகள் திட்ட அமைப்பானது, இந்தத் திட்டத்திற்கான ஒரு தலைமை முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது.