TNPSC Thervupettagam

மாற்றியமைக்கப்பட்ட குறைகடத்திகள் இந்தியா திட்டம்

June 16 , 2023 403 days 219 0
  • மாற்றியமைக்கப்பட்ட குறைகடத்திகள் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் குறைகடத்திகள் உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனை அலகுகளை அமைப்பதற்கான புதிய விண்ணப்பங்களை வரவேற்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், இந்தியாவில் குறைகடத்திகளின் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கான திட்டச் செலவில் 50% நிதியானது ஊக்கத் தொகையாக நிறுவனங்கள் /கூட்டமைப்பு / துணிகர முதலீட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கப் பெறும்.
  • இதே போல், இந்தியாவில் குறிப்பிட்டத் தொழில்நுட்பங்களின் விற்பனை அலகுகளை அமைப்பதற்கான திட்டச் செலவில் 50% நிதியானது ஊக்கத்தொகையாக கிடைக்கப் பெறும்.
  • இந்தியா குறைகடத்திகள் திட்ட அமைப்பானது, இந்தத் திட்டத்திற்கான  ஒரு தலைமை முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்