நெல் பயிரிடப்பட்ட தரிசு அல்லது நெல் அறுவடைக்குப் பின்னதாக பயிர் செய்யப் படாத நிலம் ஆனது கிழக்கு இந்தியாவில் ஒரு முக்கிய வேளாண் பிரச்சினையாக உள்ளது.
இருப்பினும், நிலப்பரப்பிற்குப் பொருந்துவதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட வேளாண்மையுடன் கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர்களை அறிமுகப் படுத்துவது அதை ஒரு வாய்ப்பாக மாற்ற உதவுகிறது.
இது பண்ணை வருமானத்திற்கும் உதவச் செய்வதோடு, உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் இந்த மாற்றீடு பயிர் முறையை மேற் கொள்கின்றன.
பயறு வகை பயிர்கள் ஆனது, அறுவடைக்கு முன்னதாக அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் வயல்களில் கிடைக்கக் கூடிய ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, குறைந்தபட்ச தலையீடு மற்றும் செலவுடன் விதைக்கப்படுகின்றன.
இத் திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு, உளுந்து, கடலைப்பருப்பு, கடுகு உள்ளிட்ட எட்டுப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இந்த மாநிலத்தில் 6.18 மில்லியன் ஹெக்டேருக்கு மேலான பரப்பளவிலான பயிர் நிலங்கள் உள்ளன என்ற நிலையில் இது 10 வேளாண் பருவநிலை மண்டலங்களைக் கொண்டுள்ளது.