TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான முதல்வரின் புத்தாய்வு மாணவர் திட்டம்

June 25 , 2024 6 days 166 0
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசானது முதலமைச்சரின் புத்தாய்வு மாணவர் திட்டத்தினை அறிமுகப் படுத்த உள்ளது.
  • மாற்றுத் திறனாளிகள் மற்றும் Ph.D (முனைவர் படிப்பு) படிக்கும் மொத்தம் 50 ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த புத்தாய்வு மாணவர் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும்.
  • இந்த 50 மாணவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற ஆட்சேர்ப்பு நிறுவனங்களால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அரசானது பயிற்சி வகுப்புகளையும் வழங்க உள்ளது.
  • சென்னையில் தங்குமிட வசதியுடன் சேர்த்து மொத்தம் 200 பயனாளிகளுக்கு சிறப்பு வகுப்புகள் வழங்கப்படும்.
  • இதுவரை இளம் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாநில அளவிலான விருது ஆனது இனி மறைந்த ஹெலன் கெல்லரின் பெயரால் அழைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்