TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்காக வேண்டி சமூக நீதியை அணுகுவது குறித்த வழிகாட்டுதல்கள்

September 3 , 2020 1454 days 549 0
  • உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நீதி அமைப்புகளை எளிதில் அணுகும் வகையில் ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பானது மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக நீதியை அணுகுவது குறித்த தனது முதலாவது வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்களானது 10 கொள்கைத் தொகுப்புகளையும் அதைச் செயல்படுத்துதலுக்கான 54 நிலைகளையும் கொண்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் ஒப்பந்தமானது 21 ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகளின் முதலாவது மிக முக்கியக் கூறாக 2007 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • மாற்றுத் திறனாளி என்பவர் நீண்ட காலமாக உடல் ரீதியாக, மன ரீதியாக, அறிவு சார்ந்த அல்லது உணர்திறன் குறைபாடுகளைக் கொண்டவர்களாவர்.
  • ஐக்கிய நாடுகளால் பராமரிக்கப்படும் புள்ளியியலின் படி, இந்தியாவில் அனைத்து வயதுக் குழுவைச் சேர்ந்தவர்களில் 2.4%  ஆண்களும் 2% பெண்களும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.
  • இதை ஒப்பிடுகையில், அமெரிக்காவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் 12.9% பெண்களும் 12.7% ஆண்களும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்