TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024 – பதக்கப் பட்டியல்

September 10 , 2024 24 days 115 0
  • ஜூடோ வீரரான கபில் பர்மார் (மத்தியப் பிரதேசம்), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்று வரலாறு படைத்து உள்ளார்.
  • ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T64 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் (உத்தரப் பிரதேசம்) 2.08 மீ உயரம் தாண்டி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.
  • ஆடவருக்கான குண்டெறிதல் F57 பிரிவில் இந்திய வீராங்கனை ஹொகாடோ ஹோடோஜெ செமா (நாகாலாந்து) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • சீனா (220), கிரேட் பிரிட்டன் (124), அமெரிக்கா (105), பிரேசில் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இப்பதக்கப் பட்டியலில் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 ஆக நிறைவானது.
  • இது நாட்டிற்கு அதிக பதக்கங்களை பெற்றுத் தந்த போட்டி பங்கேற்பாக அமைந்தது.
  • இதில் தடகளப் போட்டிகளில் 17 பதக்கங்கள் பெறப்பட்டன, அவற்றில் நான்கு தங்கப் பதக்கங்கள் ஆகும்.
  • மாரியப்பன் தங்கவேலு (தமிழ்நாடு) மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கமும், 2020 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
  • 2024 பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடத்தில் உள்ளது.
  • பாகிஸ்தான் ஒரேயொரு வெண்கலப் பதக்கத்துடன் இதில் 78/79வது இடத்தில் தனது பங்கேற்பை நிறைவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்