மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 (திருத்தப் பட்டது)
September 7 , 2024 209 days 263 0
மகளிர் ஒற்றையருக்கான SU5 என்ற பிரிவில் இந்தியப் பூப்பந்தாட்ட (பேட்மிண்டன்) வீராங்கனைகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் மணிஷா இராமதாஸ் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளனர்.
பூப்பந்தாட்டப் போட்டியில் ஒரு பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண்ணாக துளசி உருவெடுத்துள்ளார்.
இந்தியப் பூப்பந்தாட்ட வீரரான உத்தரப் பிரதேசத்தின் சுஹாஸ் யதிராஜ் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தனது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் கலப்பு பிரிவு வில்வித்தைப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் வெண்கலம் வென்றனர்.
ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் போட்டியில் அரியானாவின் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவர் வட்டு எறிதல் F56 போட்டியில் இந்தியாவின் அரியானாவின் யோகேஷ் கதுனியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T47 இறுதிப் போட்டியில் இமாச்சலப் பிரதேசத்தின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.