TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கு இடங்களை அணுக உதவும் 'பில்லியன்அபில்ஸ்’ செயலி

July 25 , 2017 2723 days 1081 0
  • மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடிய வசதி வாய்ப்புகள் அமைந்துள்ள இடங்களைக் கண்டுபிடித்து உதவும் விதமாக, ‘பில்லியனபில்ஸ்’ (Billionables) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியமான சரிவுமேடை, விசைத்தூக்கி, படிக்கட்டுகள் இல்லாத இடங்கள், பார்வையற்றோருக்கான பிரெய்ல் எழுத்து முறை, வரைபடச்செய்திகள், சைகை மொழி, கோதுமைப்புரதம் அற்ற உணவுகள் போன்றவை எங்கு அமைந்திருக்கின்றன என்பதை வரைபடத்தொடு இந்தச் செயலி காண்பிக்கும்.
  • பில்லியனபில்ஸ் செயலியில் வழிகாட்டியும், இடங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கான வசதியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்கள் அணுகக்கூடிய இடங்களை செயலியில் பதிவிடும் மக்களுக்கு வெகுமதிப்புள்ளிகள் அளித்து ஊக்கப்படுத்தப்படும்.
  • பில்லியனபில்ஸ் என்பது சமூகஆர்வத்துடன் தொடங்கப்பட்ட தொடக்கநிலை நிறுவனம் ஆகும். மாற்றுத்திறனாளியான சமீர்கார்க் என்பவர் இதனை நிறுவியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்