TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பேரிடர்கள் பற்றிய உலகளாவிய கணக்கெடுப்பு 2023

October 22 , 2023 399 days 268 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் ஆனது (UNDRR) 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு உலகளாவியக் கணக்கெடுப்பினை நடத்தியது.
  • உலக மக்கள் தொகையில் 16 விழுக்காட்டினர் ஏதோவொரு வகையான உடல் திறன் இழப்பு கொண்டவராகவும் மற்றும் பிற மக்களை விட இரண்டு அல்லது நான்கு மடங்கு அதிகமாக பேரழிவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
  • இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 84 சதவீதம் பேர் அவசரக் கால வெளியேறும் வழிகள், தங்குமிடங்கள் அல்லது அவசரகாலப் பொருட்கள் பொதி வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி அறியாமல் உள்ளனர்.
  • இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் உள்ளூர் பகுதியில் உள்ள பேரிடர் மேலாண்மை திட்டம் பற்றி அறிந்துள்ளனர்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 560 பேரழிவுகளை உலக நாடுகள் எதிர்கொள்ளும் என்று இந்தக் கணக்கெடுப்பு கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்