TNPSC Thervupettagam

மாலத்தீவிற்கான இந்தியாவின் ஆதரவு

July 13 , 2019 1868 days 654 0
  • காமன்வெல்த் நாடுகளில் மாலத்தீவை ஒரு உறுப்பினராக மீண்டும் இணைப்பதை துரிதப் படுத்தக் கோரி இந்தியா காமன்வெல்த் அமைப்பை வலியுறுத்தியுள்ளது.
  • லண்டனில் நடைபெற்ற 19வது காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்ஷங்கர் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
  • 2016 ஆம் ஆண்டில் அப்துல்லா யாமீன் அதிபராக இருந்த போது மாலத்தீவு காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேறியது.
காமன்வெல்த் நாடுகள்
  • காமன்வெல்த் என்பது 53 சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்டுள்ள நாடுகளின் தன்னார்வக் கூட்டமைப்பாகும். இவையனைத்தும் முன்னதாக பிரித்தானியப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்த நாடுகளாகும்.
  • 1931 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது லண்டனைத் தலைநகரமாகக் கொண்டது.
  • 2009 ஆம் ஆண்டில் கடைசியாக இணைந்த நாடு ருவாண்டா ஆகும்.
  • அனைத்து 53 உறுப்பினர் நாடுகளும் பொருளாதார நிலை அல்லது பொருளாதார அளவு ஆகியவற்றின் படியல்லாமல் சமமான கருத்துரிமையைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்