இந்தியா மற்றும் மாலத்தீவுகள் ஆனது, மே 10 ஆம் தேதிக்கு முன்னதாக மீதமுள்ள இந்தியப் படைகளைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டுள்ளன.
அதிபர் நிர்ணயித்த ஒரு காலக் கெடுவிற்கு முன்னதாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது அனைத்துப் படை வீரர்களையும் திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியாவினால் முன்னர் பரிசளிக்கப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் ரக விமானங்களை இயக்கவும் பராமரிக்கவும் மட்டுமே இந்திய இராணுவ வீரர்கள் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டனர்.
மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சுவின் புகழ்பெற்ற "இந்தியாவை வெளியேற்றுவோம்" என்ற பிரச்சாரம் நாட்டில் இந்திய நாட்டின் செல்வாக்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.