மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் நானோ மற்றும் மென்பொருள் அறிவியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாலிப்டினம் டை ஆக்ஸைடின் மூலம் நீரிலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான குறைந்த செலவு கொண்ட ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
மாலிப்டினம் டை ஆக்ஸைடானது நீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றலைக் குறைப்பதற்காக வேண்டி ஒரு சிறந்த ஊக்கியாகச் செயல்படுகின்றது.
இந்தச் செயல்முறையானது மின்னாற்பகுப்பு எனப்படுகின்றது.
மாலிப்டினம் டை ஆக்ஸைடானது தற்பொழுது ஊக்கியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பிளாட்டினத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தும் திறன் கொண்டு விளங்குகின்றது.
நீரின் பிரிப்புத் தன்மையானது ஹைட்ரஜனைப் பெறுவதற்கு முக்கியமானதாக விளங்குகின்றது.